| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200519b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a மகிஷாசுரமர்த்தினி |
| 300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
| 340 | : | _ _ |a கல் |
| 500 | : | _ _ |a பீடத்தின் மீது அமைந்துள்ள எருமைத்தலையின் மேல் நின்ற நிலையில் மகிடமர்த்தினி விளங்குகிறாள். முன்வலது கையும், பின் இடது கையும், தலையலங்காரமும் உடைந்த நிலையில் காணப்படும் இச்சிற்பத்தில் தேவி வலது பின் கையில் சக்கரம் ஏந்தியுள்ளாள். இடது முன் கை தொடையின் மீது ஊரு முத்திரையில் வைக்கப்பட்டுள்ளது. கணுக்கால் வரையிலான மடிப்புகளுடன் கூடிய ஆடையும் மார்பில் குஜபந்தமும் காட்டப்பட்டுள்ளன. நெற்றியில் தொங்கல்களுடன் கூடிய நெற்றிப்பட்டை துலங்குகிறது. செவிகளில் பத்ரகுண்டலம் அணி செய்ய, கடக வளை, கேயூரம், தோள்வளை ஆகியன கையணிகளாக விளங்கிட கால்களில் வீரக்கழல்கள், பாதச்சதங்கை விளங்கிட, இடையில் கட்டிய ஆடை முடிச்சுகள் பின்புறம் நீண்டு தொங்கிய நிலையில் விசயநகரக் கலைப்பாணியாக இச்சிற்பம் விளங்குகிறது. |
| 520 | : | _ _ |a மகிஷாசுரமர்த்தினி அல்லது துர்க்கை (சக்தி) சிங்க வாகனத்தில் ஏறி, மகிஷன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்த அன்னையாவாள். பல்லவர் காலத்திய மகிஷமர்த்தினி உருவங்கள் தொண்டை மண்டலமெங்கும், சோழர் காலத்திய கற்றளிகளில் சோழர் கலைப்பாணியிலும் காணக்கிடக்கின்றன. |
| 653 | : | _ _ |a மகிஷாசுரமர்த்தினி, மகிஷமர்த்தினி, கொற்றவை, துர்க்கை, சக்தி, சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
| 850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
| 905 | : | _ _ |a கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 10.9604046 |
| 915 | : | _ _ |a 78.077561 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001517 |
| barcode | : | TVA_SCL_0001517 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |